வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்கள், தூதுவர்கள் உள்ளிட்ட அழைக்கப்பட்ட விருந்தினர்களுக்கான பாரம்பரிய தேநீர் விருந்தினை நடத்த வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.
நாட்டின் பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.
நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தை எதிர்வரும் 14ஆம் திகதி சமர்ப்பிக்க உள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1