சுமார் 130 கோடி ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மூத்த திரைப்பட நடிகையும், மற்றொரு நடிகையும் தலைமறைவாக உள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தை தவிர்த்து வரும் இந்த இரண்டு நடிகைகள் தொடர்பில் நீதிமன்றில் உண்மைகளை அறிக்கையிட்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த இரண்டு நடிகைகளும் திலினி பிரியமாலியுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாகவும் குற்றப் புலனாய்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1