26.7 C
Jaffna
December 28, 2024
Pagetamil
விளையாட்டு

கோலி ‘ஃபேக் ஃபீல்டிங்’ செய்தார்: பங்களாதேஷ் அணி குற்றச்சாட்டு

நடப்பு ரி20 உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர் 12 சுற்றுப் போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை வென்றது இந்தியா. இந்த வெற்றி இந்திய அணிக்கு அவசியமான ஒன்று. இந்நிலையில், இந்தப் போட்டியில் முன்னாள் கப்டன் விராட் கோலி செய்த ஃபீல்டிங் தவறை சுட்டிக்காட்டி குற்றம்சாட்டியுள்ளது பங்களாதேஷ் அணி.

இந்தப் போட்டி அவுஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் நாணயச்சுழற்சியின் வென்ற பங்களாதேஷ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது.

இரண்டாவது இன்னிங்ஸில் மழை குறுக்கிட்டது. அதனால் 16 ஓவர்களில் 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை பங்களாதேஷ் விரட்டியது. இருந்தும் 145 ரன்கள் மட்டுமே அந்த அணி எடுத்தது.

“நிச்சயமாக மழைக்கு பிறகு மீண்டும் ஆட்டம் தொடங்கியபோது மைதானத்தில் இருந்த ஈரப்பதம் ஆட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால், இந்தப் போட்டியில் ஒரு போலியான த்ரோ இருந்தது. அதன்மூலம் எங்களுக்கு 5 ரன்கள் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அதுவும் எங்களுக்கு கிடைக்கவில்லை” என பங்களாதேஷ் வீரர் நூருல் ஹசன் தெரிவித்திருந்தார்.

அவர் குறிப்பிட்டு சொல்லும் அந்தச் சம்பவம், பங்களாதேஷ் அணி துடுப்பாட்டம் செய்தபோது 7வது ஓவரில் நடைபெற்று இருந்தது. டீப்பில் இருந்து பந்தை அர்ஷ்தீப், விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கிற்கு பாஸ் செய்தார். பந்து பொயிண்ட் ஃபீல்டராக இருந்த கோலியை கடந்து சென்றது. அப்போதுதான் போலி த்ரோவை ஸ்டம்புகளை நோக்கி செய்திருந்தார் அவர்.

இருந்தும் அந்த குறிப்பிட்ட பந்தில் 2 ரன்கள் எடுத்தது பங்களாதேஷ்.

இந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதை வென்றதும் கோலி தான்.

இந்த சம்பவம் பற்றி குறிப்பிட்ட பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் கிரிக்கெட் நடவடிக்கை தலைவர் ஜலால் யூனுஸ், சர்ச்சைக்குரிய விஷயத்தை சரியான மன்றத்தில் எழுப்புவோம் என்று கூறினார்.

“நாங்கள் அதைப் பற்றி பேசினோம். நீங்கள் அதை டிவியில் பார்த்தீர்கள், உங்கள் முன் நடந்த அனைத்தும். போலி வீசுதல் தொடர்பாக ஒன்று இருந்தது, நாங்கள் போலி வீசுதல் குறித்து நடுவர்களிடம் தெரிவித்துள்ளோம், ஆனால் அவர் அதை கவனிக்கவில்லை என்றும், அதனால் தான் ரிவியூ எடுக்கவில்லை என்றும் கூறினார். ஷகிப் எராஸ்மஸுடன் அதைப் பற்றி நிறைய விவாதித்தார், மேலும் ஆட்டத்திற்குப் பிறகு அவருடன் கூட பேசினார், ” என ஜலால் கூறினார்.

“இரண்டாவதாக, ஷாகிப் ஈரமான மைதானத்தை பற்றிப் பேசியிருந்தார். இன்னும் சிறிது நேரம் எடுத்து, ஆடுகளம் காய்ந்த பிறகு விளையாட்டைத் தொடங்கலாம் என்று கேட்டார். ஆனால்… நடுவர்களின் முடிவே இறுதியானது, அதனால்தான் வாதத்திற்கு இடமில்லை. நீங்கள் விளையாடுவீர்களா அல்லது விளையாட மாட்டீர்களா என்பதில் ஒரே ஒரு முடிவு மட்டுமே இருந்தது,” என்று அவர் மேலும் கூறினார்.

“நாங்கள் அதை சரியான மன்றத்தில் பிரச்சினையை எழுப்ப முடியும்,” என்று அவர் தெரிவித்தார்.

அதென்ன போலி த்ரோ?

சர்வதே கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) விதி 41.5 இன்படி களத்தில் பந்து வீசும் அணி துடுப்பாட்டம் செய்து கொண்டிருப்பவர்களிடையே கவனச் சிதறலை ஏற்படுத்துவது, ஏமாற்றுவது அல்லது தடுப்பது போன்ற வேலைகளை செய்வது தவறு. அதனை நடுவர்கள் கவனித்தால் அந்த பந்தை டெட் போலாக அறிவித்து, துடுப்பாட்டம் செய்யும் அணிக்கு 5 ரன்கள் பெனால்டியாக கொடுக்கலாம். கோலி, பந்தை எடுக்காமல் வெறும் கையால் ஸ்டம்பை நோக்கி த்ரோ செய்வது போல சைகை செய்திருந்தார். அது தான் இப்போது சர்ச்சைக்குள் ஆகியுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சாம் கான்ஸ்டாஸ் உடன் மோதிய விராட் கோலி: ஐசிசி விதிகள் சொல்வது என்ன?

Pagetamil

நியூசிலாந்து தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

Pagetamil

21ஆம் நூற்றாண்டின் அரிய கிரிக்கெட் சாதனை: பாகிஸ்தான் அணி அசத்தல்!

Pagetamil

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார் இந்திய வீரர் அஸ்வின்!

Pagetamil

வெற்றியுடன் டிம் சவுதிக்கு பிரியாவிடை கொடுத்த நியூசிலாந்து!

Pagetamil

Leave a Comment