நடப்பு ரி20 உலகக் கோப்பை தொடரில் அரை இறுதிக்கு முன்னேறும் நான்கு அணிகள் எவை எதிர்பார்ப்பு மில்லியன் கணக்கில் எகிறி உள்ளது. இத்தகைய சூழலில் வரும் ஞாயிறு அன்று இந்திய அணி, சிம்பாவே அணியை எதிர்கொள்கிறது. இதில் சிம்பாவே வென்றால் தொடரில் பெரிய அளவில் தாக்கம் ஏற்படும்.
இந்தச் சூழலில், இந்தப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தினால் சிம்பாவே நாட்டைச் சேர்ந்தவரை மணம் முடிப்பேன் என பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த நடிகை ஷெகர் ஷின்வாரி ட்வீட் செய்துள்ளார்.
புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் விளையாட்டுப் போட்டிகளில் வெல்லும் ஆடவர்கள், அந்த நாட்டில் உள்ள இளவரசிகளை மணம் செய்து கொள்வார்கள். இதை திரைப்படங்களில் கூட பார்த்துள்ளோம். கிட்டத்தட்ட ஷெகரின் இந்த அறிவிப்பும் அப்படித்தான் உள்ளது என்று நெட்டிசன்கள் சொல்கின்றனர்.
முன்னதாக, இந்தியா – வங்கதேச அணிகள் பலப்பரீட்சை செய்தபோது பாகிஸ்தான் ரசிகர்கள், வங்கதேச அணிக்கு முழு ஆதரவு கொடுத்தனர். ஆனால், அந்தப் போட்டியில் இந்தியா வென்றது. இப்போது பாகிஸ்தான் ரசிகர்கள் ஜிம்பாப்வே அணியை ஆதரித்து வருகின்றனர். இதற்கு முன்னர் ஜிம்பாப்வே மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை செய்தபோது அந்த அணியை மட்டம் தட்டி தூற்றியவர்கள் இப்போது போற்றி வருகின்றனர்.