24.5 C
Jaffna
February 7, 2025
Pagetamil
உலகம்

4 மாடி கட்டிடத்தில் ஏறி செல்பி எடுத்த பெண் தவறி விழுந்து பலி!

4 மாடி கட்டிடத்தின் மேற்கூரையில் இருந்து செல்ஃபி எடுத்த 15 வயதான மாணவியொருவர் நிலை தடுமாறி தரையில் விழுந்து உயிரிழந்தார்.

மேற்கு துருக்கியில் உள்ள முக்லா மாகாணத்தில் உள்ள ஒர்டகா நகரில் இந்த சோகம் நடந்துள்ளது.

நான்கு மாடிக் கட்டிடத்தைச் சுற்றியுள்ள சி.சி.டி.வி.யில் 15 வயது சிறுமி தரையில் விழும் பயங்கரமான தருணம் படம்பிடிக்கப்பட்டுள்ளது.

மெலிக் கன் கனவுஸ்லர் என்ற மாணவியே உயிரிழந்தார்.

குடியிருப்பின் மேற்கூரையில் ஏறி செல்பி எடுத்த பின், தற்செயலாக கைத்தொலைபேசியை நழுவ விட்டார். அதை பிடிக்க முற்பட்ட போது சமநிலையை இழந்து, 40 அடிக்கும் உயரமான கூரையிலிருந்து கீழே விழுந்தார்.

கீழேயிருந்த கொங்கிரீட் தரையில் மாணவி விழுந்தார்.

நடைபாதையில் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்த போது, அவருக்கு முன்பாக மாணவி தரையில் விழுந்தார்.

மருத்துவப் பணியாளர்களும் பொலிஸாரும் பலத்த காயமடைந்த மாணவியை ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுவதற்கு முன்பு சிகிச்சை அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

15 வயது சிறுமி முகலா நகரில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு  18 நாட்கள் உயிருக்கு போராடியவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மெலிக்கின் உடல் ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 30 அன்று அடக்கம் செய்யப்பட்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விற்ற வீட்டில் புது ஓனருக்கு தெரியாமல் 7 ஆண்டுகள் வாழ்ந்த கில்லாடி பெண்

east tamil

இஸ்ரேலும் மனித உரிமை ஆணைக்குழுவில் இருந்து விலகல்

east tamil

யூதர்களுக்கு ஆதரவாக மனித உரிமை பேரவையில் இருந்து விலகிய அமெரிக்கா

east tamil

திருநங்கைகள் விளையாட்டில் பங்கேற்க தடை – ட்ரம்ப்

east tamil

DeepSeek ஆபத்தானது

east tamil

Leave a Comment