ஜூலை மாதம் ஏற்பட்ட பொதுமக்கள் எழுச்சியின் போது சேதமடைந்த ஜனாதிபதி மாளிகையின் திருத்தப்பணிகளுக்கு ரூ.364.8 மில்லியன் செலவாகும் என அரச பொறியியல் கூட்டுத்தாபனம் மதிப்பிட்டுள்ளது.
இதில் கட்டிட திருத்தப் பணிகளும் அடங்கும்.
இருப்பினும், அந்த மதிப்பீட்டில் மரத்தளபாடங்கள், வரலாற்று ஓவியங்கள், உடற்பயிற்சி மைய உபகரணங்கள் மற்றும் வாகனங்களுக்கு ஏற்பட்ட சேதம் இணைக்கப்படவில்லை.
இந்த றிக்கையில் ஜனாதிபதி மாளிகையின் திருத்தப் பணிகளை இரண்டு கட்டங்களாக குறிப்பிடப்பட்டுள்ளது.
முதல் கட்டத்தின் கீழ், அரச செயல்பாடுகள் மற்றும் பிற சிறப்பு நிகழ்வுகள் நடைபெறுவதற்கு வசதியாக திருத்தப்பணிகளை மேற்கொள்ளும் அதேவேளை, இரண்டாவது கட்டத்தில், வாழும் பகுதிகள் மற்றும் அலுவலக அறைகள் சரிசெய்யப்படும்.
மறுசீரமைப்பு பணிகளுக்கு பொது நிதி பயன்படுத்தப்பட வேண்டும் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.