Pagetamil
தமிழ் சங்கதி

விடுதலைப் புலிகளை ஏன் தடைசெய்தோம்?: சிறிதரன் எம்.பியை வாயடைக்க வைத்த அமெரிக்க குழுவினர்!

தமிழீழ விடுதலைப் புலிகள் சொந்த இன மக்களையே கொன்றார்கள், தமிழ் அரசியல் தலைவர்களையும் படுகொலை செய்தார்கள். அதனாலேயே அமெரிக்கா அவர்களை தடைசெய்தது என, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனிற்கு இலங்கைக்கான அமெரிக்க தூதரக அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

அத்துடன், மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாகவே புலிகள் மீதான தடைஅறிவிக்கப்பட்டு விட்டது என்ற காலச்சூழலையும் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இலங்கைக்கான அமெரிக்காவின் துணைத்தூதராக புதிதாக நியமனம் பெற்றிருப்பவர் டக் சோனெக். அவர் இந்த வாரம் வடக்கிற்கு விஜயம் செய்து, பல்வேறு தரப்புக்களையும் சந்தித்து வருகிறார்.

இதன் ஒரு கட்டமாக, நேற்று முன்தினம் (26) தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு காலை விருந்தளித்து, கலந்தரையாடல் நடத்தியிருந்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் த.சித்தார்த்தன், இலங்கை தமிழ் அரசு கட்சியின் மூத்த துணைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த சந்திப்பின் போது, சிறிதரன் எம்.பி ஒரு அப்பிராயத்தை வெளியிட்டார்.

“நீங்கள் (அமெரிக்கா) மஹிந்த ராஜபக்சவின் கருத்தைக் கேட்டு, அவரது ஆட்சிக்கு  உறுதுணையாகத்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது தடைவிதித்தீர்கள். தமிழ் மக்களின் அரசியல் போராட்டம் பின்னடைவை சந்தித்தமைக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்“ என குறிப்பிட்டார்.

அவர் குறிப்பிட்ட விடயம் முக்கியமானதுதான். இன்றைய தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல்வாதிகளில் பெரும்பாலானவர்கள் இவற்றைப் பற்றி பேசுவதில்லை. சிலருக்கு இதெல்லாம் தெரிந்தேயிராது.

ஆனால் என்ன, சிறிதரன் எம்.பி, கால விவகாரத்தில் கோட்டைவிட்டு விட்டார். அமெரிக்கா அரசு 1997ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளை சர்வதேச பயங்கரவாத அமைப்பாக பட்டியல்ப்படுத்தியது. அதற்கு அடுத்த ஆண்டு- 1998 இல்தான் இலங்கை அரசு புலிகளை பயங்கரவாத அமைப்பாக பட்டியல்படுத்தியது.

மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியானது 2005ஆம் ஆண்டு.

சிறிதரன் எம்.பியின் கருத்தை கேட்ட, அமெரிக்க குழுவில் அங்கம் வகித்த அரசியல் விவகாரங்களை கவனிக்கும் பெண், சற்றே சூடாக பதிலளித்துள்ளார்.

“புலிகள் மீதான அமெரிக்க தடைக்கும் மஹிந்த ராஜபக்சவிற்கும் தொடர்பில்லை. மஹிந்த பதவிக்கு வருவதற்கு முன்னரே அமெரிக்கா புலிகளை தடைசெய்து விட்டது. அமெரிக்காவின் தடைக்கு காரணங்கள் இருந்தது. புலிகள் பல்வேறு பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். தமது சொந்த மக்களையும், தமிழ் அரசியல் தலைவர்களையும் கொலை செய்திருந்தனர்.

புலிகளை தடைசெய்திருந்தாலும், தமிழ் மக்களின் உரிமைகளிற்காக அமெரிக்கா தொடர்ந்து பாடுபடுகிறது. அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கிறது. ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானங்களை நாமே முன்னெடுக்கிறோம்“ என தெரிவித்துள்ளார்.

புலிகள் மீதான தடைக்கான காரணங்களை அமெரிக்க தரப்பினர் பட்டியல்படுத்திய பின்னர், சிறிதரன் எம்.பி கப்சிப்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
6
+1
0
+1
0
+1
4

இதையும் படியுங்கள்

உட்கட்சி மோதல் உச்சம்… 4வது வழக்கில் மத்தியகுழு முடக்கப்படலாம்: இலங்கை தமிழ் அரசு கட்சி ஸ்தம்பிக்கும் நிலை!

Pagetamil

மாவை கட்சியின் தலைவரா?… இல்லையா?: 5 மணித்தியாலங்கள் மல்லுக்கட்டியும் தமிழரசு மத்தியகுழுவில் முடிவில்லை!

Pagetamil

தேர்தல் தோல்வியுடன் சங்கு அணியில் குழப்பம்: 3 சிறிய கட்சிகளை வெளியே அனுப்ப முயற்சி!

Pagetamil

உட்கட்சி மோதலால் திண்டாடும் ரெலோ!

Pagetamil

சந்திக்கு வருகிறது உள்வீட்டு மோதல்: ரெலோவும் நீதிமன்ற படியேறுகிறது!

Pagetamil

Leave a Comment