எம்பிலிப்பிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலையின் நோயாளர் காவு வண்டியில் வெளிப்புற சாதனத்தை பொருத்தி ஓடோமீட்டரில் மோசடி செய்த சாரதியை பொலிசார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் அம்புலன்ஸின் ஓடோமீட்டரை மாற்றியதன் மூலம் கணிசமான காலத்திற்கு எரிபொருளை ஏமாற்றி, அந்த அளவிலான எரிபொருளை மற்றவர்களுக்கு விற்பனை செய்துள்ளார்.
மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் முறைப்பாட்டையடுத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த சம்பவத்தை தனது கையடக்கத் தொலைபேசியில் படம்பிடித்த நபர் ஒருவர், அது தொடர்பான காணொளியை சப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
எம்பிலிப்பிட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர், சந்தேகநபர் நவம்பர் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1