Pagetamil
இலங்கை

போதைப் பாவனையிலிருந்து விலகுங்கள்!

போதைவஸ்து பாவனைக்கும் போதைவஸ்தை கடத்துவதற்கும் செயல்படுபவர்கள் அனைவரும் அந்த தீய செயற்பாட்டில் இருந்து விலக வேண்டுமென யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் கோரிக்கை விடுத்தார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகரித்து வரும் போதைபொருள் பாவனை தொடர்பில் கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

எங்கள் சமுதாயத்தை ஆட்கொண்டிருக்கும் பெரும் தீமையாகிய போதைவஸ்து பாவனைக்கு எதிராக அனைவரும் பாடுபட வேண்டும். அதற்கு எதிராக பாடுபடுபவர்களுக்காக நாங்கள் பிரார்த்திக்கின்றோம்.

இன்னமும் போதைவஸ்து பாவனைக்கும் போதைவஸ்தை கடத்துவதற்கும் பலரும் ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். அவ்வாறானவர்களிடம் நாங்கள் மன்றாட்டமாக கோருவது என்னவெனில் இந்த தீய செயற்பாட்டில் இருந்து அனைவரும் விலக வேண்டும்.

இவ்வாறான தீய செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக பாதுகாப்பு தரப்பினரும் சிவில் உத்தியோகத்தர்களும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இவ்வாறு போதைப் பொருளால் பாதிக்கப்படுகின்ற பிள்ளைகளை பெற்றோர்கள் இனம் கண்டு உடனடியாக புனருத்தாரன இடங்களுக்கு அனுப்பி சிகிச்சைக்குரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களிடம் பணம் பெற்ற பொலிஸ் அதிகாரியின் மகனுக்கு விளக்கமறியல்!

Pagetamil

உண்டியல் குலுக்கி மீண்டும் கல்லா கட்ட நினைக்கும் ஊசிக்கோஸ்டி!

Pagetamil

சந்தேகநபர்களை கைது செய்ய வேண்டாமென அறிவித்தல்

Pagetamil

பட்டலந்த கொடூரம் பற்றி ரணிலின் விளக்கம்

Pagetamil

மழை, மின்னல் எச்சரிக்கை

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!