நீர்கொழும்பு, ஆண்டிஅம்பலமவில் கொள்ளையில் ஈடுபட்டு தப்பிச் செல்ல முற்பட்ட இருவர் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலியானதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.
உயிரிழந்த கொள்ளையர் மீரிகம பிரதேசத்தை சேர்ந்த இருபத்தி இரண்டு வயதுடையவர்.
நீர்கொழும்பு மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இந்த கொள்ளையர்கள் தங்க நகையை திருடிக்கொண்டு தப்பிச் செல்வதாக போக்குவரத்து பொலிஸ் மோட்டார் சைக்கிள் பிரிவுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், கொள்ளையர்களை துரத்திச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது கொள்ளையர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
பொலிசார் திரும்பி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
கட்டுநாயக்க பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1