பாணந்துறை ஊழல் தடுப்பு பிரிவினர் நேற்று தெரணியகல பிரதேசத்தில் போலி இலக்கத்தகடு பொருத்தப்பட்ட ஜீப் வண்டியை விற்பனை செய்ய முற்பட்ட சந்தேகநபர் ஒருவரை சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.
எட்டு மில்லியன் ரூபா பெறுமதியான ஜீப் வண்டியை இரண்டு மில்லியன் ரூபாவிற்கு விற்பதற்காக ஒருவர் கொள்வனவு செய்பவரை தேடுவதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த பிரிவினர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
வாங்குபவர்கள் என்ற போர்வையில் சென்ற பொலிசார் இராஜதந்திர நம்பர் பிளேட் தாங்கிய வாகனத்துடன் விற்பனையாளரை கைது செய்தனர்.
உரிய ஆவணங்களில் உள்ள விவரங்கள் வாகனத்தின் சேசி எண்ணுடன் ஒத்துப் போகாததால் இது சட்டவிரோதமாக அசெம்பிள் செய்யப்பட்ட வாகனமாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட 55 வயதுடைய சந்தேக நபர் தெரணியகல பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், இவர் இதற்கு முன்னரும் இதே போன்ற குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தெரணியகல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.