வெலிகந்தாவில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவ கப்டன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இராணுவ சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஐந்து இராணுவத்தினர் திருகோணமலையில் இருந்து மாதுரு ஓயா இராணுவ முகாமிற்கு பணி நிமித்தம் பயணித்த போதே சிங்கபுர – வெலிகந்த வீதியில் விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
இந்த விபத்தில் முன் பயணிகள் இருக்கையில் அமர்ந்திருந்த இராணுவ கப்டன் உயிரிழந்தார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இறந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
சாரதி உட்பட மேலும் நான்கு இராணுவத்தினர் சிகிச்சைக்காக பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த கப்டன் மாத்தளை பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடையவராவார்.
சடலம் தற்போது வெலிகந்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
வெலிகந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.