25.8 C
Jaffna
December 13, 2024
Pagetamil
இலங்கை

போலி வேலைவாய்ப்பு நேர்காணல் நடத்தியவர்கள் கைது!

இங்கிலாந்தில் தாதியர் சேவைத் துறையில் வேலை வழங்குவதாகக் கூறி கொழும்பில் உள்ள நட்சத்திர வகுப்பு விடுதியில் நேர்காணல் நடத்திய பெண் உட்பட மூவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

போலி வேலைவாய்ப்பு நிறுவனம் என்ற பெயரில் நேர்காணல் நடத்தப்படுவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு கிடைத்த தகவலின் பிரகாரம், புலனாய்வு அதிகாரிகள் உடனடியாக அந்த இடத்தை சுற்றிவளைத்ததாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

சோதனையின்போது, ​​அந்த இடத்தில் இருந்து 3 இலட்சம் ரூபாய், வெளிநாட்டு வேலைவாய்ப்பு விண்ணப்பங்கள் மற்றும் இரண்டு ரசீது புத்தகங்களை விசாரணை அதிகாரிகள் கைப்பற்றினர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சோபா சேயா போட்டியில் திருமலை புகைப்படக் கலைஞர்கள்

east pagetamil

திருகோணமலையில் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்.

east pagetamil

சம்பூரில் பாலியல் துஷ்பிரயோகம் – பூசாரிக்கு 30 வருட கடூழிய சிறை!

east pagetamil

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறைப்பு!

Pagetamil

நெற்றிக் கண்ணைத் திறத்தல்

Pagetamil

Leave a Comment