25.8 C
Jaffna
December 12, 2024
Pagetamil
சினிமா

திருமணம் செய்து குழந்தை பெற்றுக்கொள்ள ஆசை: நடிகை தமன்னா!

திரைத்துறையில் 17 வருடங்களான நிலைத்து நிற்கும் நடிகை தமன்னா. தற்போது இவர் அளித்துள்ள பேட்டியில் திருமணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

தமிழில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்த தமன்னா 17 வருடங்களாக சினிமாவில் நீடிக்கிறார். தற்போது அவருக்கு 32 வயது ஆவதால் திருமணம் செய்து வைக்க பெற்றோர் மாப்பிள்ளை பார்க்கின்றனர் என்றும், விரைவில் அவரது திருமணம் நடக்க உள்ளது என்றும் தகவல்கள் பரவின.

இதற்கு விளக்கம் அளித்து தமன்னா அளித்துள்ள பேட்டியில், ”எல்லாரையும் போலவே எனது பெற்றோரும் என்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்திக் கொண்டே இருக்கிறார்கள். எனக்கும் திருமண அமைப்பின் மீது நம்பிக்கை இருக்கிறது. திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும், தாயாக வேண்டும் என்றும் ஆசையாக உள்ளது.

ஆனால் தற்போதைக்கு நான் எனது சொந்த வாழ்க்கைக்காக நேரத்தை ஒதுக்க முடியாத நிலையில் இருக்கிறேன். நடிப்புத் தொழிலில் மிகவும் பிஸியாக இருக்கிறேன். பிஸி காரணமாக சில முறை எனது பெற்றோரிடம்கூட தொலைபேசியில் பேச முடியாத நிலையில் இருக்கிறேன்.

இப்போதைக்கு எனது சந்தோஷம் எல்லாமே சூட்டிங் லொகேஷனில்தான் இருக்கிறது. எனது தொழிலை நான் இந்த அளவிற்கு சிறப்பாக செய்வதற்கு எனது பெற்றோர் மற்றும் எனது ரசிகர்களின் ஆதரவு தான் காரணம் என்பதை மறக்க மாட்டேன்” என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தனுஷ் தொடர்ந்த வழக்கு: நயன்தாரா, விக்னேஷ் சிவன் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

Pagetamil

காதலரை கரம் பிடித்தார் நடிகை கீர்த்தி சுரேஷ்: விஜய் நேரில் வாழ்த்து!

Pagetamil

மனைவியை பிரிவதாக இயக்குநர் சீனு ராமசாமி அறிவிப்பு

Pagetamil

‘நடிகர் வடிவேலு குறித்து அவதூறு கூறமாட்டேன்’ – நீதிமன்றத்தில் சிங்கமுத்து உத்தரவாத மனு

Pagetamil

“நாங்கள் நல்ல நண்பர்களாகத்தான் இருந்தோம், ஆனால்…” – தனுஷ் குறித்து மனம் திறந்த நயன்தாரா!

Pagetamil

Leave a Comment