லங்கா சதொச நிறுவனம் இன்று (19) முதல் அமுலுக்கு வரும் வகையில் ஆறு பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.
உணவுப் பொருட்களை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சதொச விற்பனை நிலையங்களிலும் கொள்வனவு செய்ய முடியும்.
அதன்படி,
ஒரு கிலோ வெள்ளைப்பூண்டின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 490 ரூபாவாகும்.
ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 55 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 320 ரூபாவாகும்.
ஒரு கிலோ நெத்தலியின் விலை 50 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,450 ரூபாவாகும்.
ஒரு கிலோ கடலைப் பருப்பின் விலை 30 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 285 ரூபாவாகும்.
ஒரு கிலோ வெள்ளை சீனியின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 260 ரூபாவாகும்.
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ வெள்ளை பச்சை அரிசியின் விலை 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 169 ரூபாவாகும்.