Pagetamil
கிழக்கு

மட்டக்களப்பு விபத்தில் 2 சிறுவர்கள் பலி

மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பில் நேற்று முன்தினம் (13) மாலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

புதுகுடியிருப்பு, சிறுவர் இல்லம் முன்பாகவுள்ள வளைவு பகுதியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மூன்று இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் வேகமாகச்சென்று வாகனமொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளை மோதிய வாகனம் தப்பிச் சென்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் தலைக்கவசம் அணிந்திருக்கவில்லையென்பதுடன் அதிகவேகத்துடன் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்கள் 16 மற்றும் 18வயதுடைய சிறுவர்கள் எனவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

திருகோணமலை கடற்பரப்பில் ஆளில்லா விமானம்

east tamil

Update – 3 – கடலில் நீராட சென்ற 3 பேர் – மூவரின் சடலமும் மீட்பு

east tamil

Update 2 – கடலில் நீராட சென்ற 3 பேர்! – சிறுவனின் சடலம் மீட்பு

east tamil

கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர்களுக்கு நியமனம்

east tamil

மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற சுனாமி நினைவேந்தல் நிகழ்வு

east tamil

Leave a Comment