யாழ்ப்பாணம் – பண்ணை பகுதியில் அமைந்துள்ள சுகாதார அமைச்சின் வளாகத்தில் புலிகளின் தங்கநகைகளை தேடி அகழ்வு மேற்கொள்ளப்பட்ட போதும், எதுவும் கிடைக்கவில்லை.
கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய யாழ்ப்பாணம் பொலிஸார் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தின் கட்டளைக்கு அமைய நீதவான் ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் இந்த அகழ்வு பணியினை முன்னெடுத்தனர்.
தட அறிவியல் பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர், யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு பொலிஸார் இணைந்து இந்த அகழ்வு பணியினை முன்னெடுத்தனர்.
எனினும், எந்த பொருளும் கிடைக்கவில்லை.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1