25.7 C
Jaffna
December 28, 2024
Pagetamil
இலங்கை

யாழ்ப்பாணம் வந்தும் பனம் கள்ளு குடிக்க முடியவில்லை: இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தை வேதனை!

யாழ்ப்பாணத்தில் பனைமரங்கள் இருக்கின்றபோதும் பனம் கள் தனக்கு கிடைக்கவில்லையென பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த வேதனை தெரிவித்தார்.

பனை அபிவிருத்தி சபையின் தலைமை அலுவலக கட்டிடம் இன்றைய தினம் கைதடியில் திறந்து வைக்கப்பட்டபோது கருத்து தெரிவித்த போதே லொகான் ரத்வத்த இதனை தெரிவித்தார்.

பல்லாயிரக்கணக்கான பனைமரங்கள் உள்ள இடமாக யாழ்ப்பாணமும் காணப்படுகின்றது. இன்று காலை நாங்கள் வந்து பனம் கள்ளை தேடிய போது யாழ்ப்பாணத்தில் பனம் கள்ளு எனக்கு கிடைக்கவில்லை என்றார்.

மேலும் தெரிவிக்கையில், இங்கே உற்பத்தி செய்யப்படும் பனை உற்பத்தி பொருட்களுக்கு மேற்குலக நாடுகளில் அதிக கேள்வி காணப்படுகின்றது, பனை அபிவிருத்தி கைத்தொழிலானது மிகவும் அபிவிருத்தி அடைவதோடு வடபகுதி மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற உதவ வேண்டும் என்றார்.

45 வருடங்களாக வாடகை வீட்டில் செயல்பட்டுவந்த பனை அபிவிருத்தி சபைக்கு இன்றைய தினம் சொந்தமானதொரு புதிய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டமை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.

லொகான் ரத்வத்தை சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சராக இருந்த போது மதுபோதையில் சிறைக்குள் நுழைந்து தமிழ் அரசியல் கைதிகளின் தலையில் கைத்துப்பாக்கியை வைத்து மிரட்டிய விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘மக்களுக்கு எதிராக செயற்பட்ட அரச அதிகாரிகளுடன் போராடிக்கொண்டிருக்கிறோம்’: அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி

Pagetamil

மஹிந்தவின் வலது கையிடம் நேற்று: மகனிடம் 3ஆம் திகதி விசரணை!

Pagetamil

இலஞ்சம் வாங்கியபோது மாட்டிய முன்னாள் மாகாணசபை உறுப்பினருக்கு விளக்கமறியல்!

Pagetamil

மனுஷ நாணயக்காரவின் சகோதரர் கைது

Pagetamil

ஊடகவியாளர் தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதலுக்கு சமத்துவக் கட்சி கண்டனம்

Pagetamil

Leave a Comment