25.8 C
Jaffna
December 26, 2024
Pagetamil
இலங்கை

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சனத் நிஷாந்த எச்சரிக்கப்பட்டு விடுதலை!

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இராஜாங்க அமைச்சர் திரு.சனத் நிஷாந்த நீதிமன்றில் முன்னிலையாகியதையடுத்து, அவரை கடுமையாக எச்சரித்து விடுதலை செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காலை 10.30 மணியளவில் முன்னிலையில் இருப்பதைக் கருத்தில் கொண்டு இந்த உத்தரவை பிறப்பித்தது.

இதன் பின்னர் ஒவ்வொரு நீதிமன்ற தினத்திலும் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன அவரை எச்சரித்தார்.

முன்னதாக, நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் ராஜாங்க அமைச்சர் நிஷாந்தவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதை அடுத்து, அமைச்சர் சனத் நிஷாந்தவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்bருந்தது.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

கடந்த வாரம், இலங்கை நீதித்துறை அதிகாரிகள் சங்கம் தாக்கல் செய்த வழக்கை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம், இராஜாங்க அமைச்சர் நிஷாந்தவுக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பியது.

அவருக்கு ஏன் தண்டனை வழங்கக்கூடாது என்பது குறித்து இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு உத்தரவிடப்பட்டது.

நீதியரசர்களான நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஆர் குருசிங்க ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த அறிவித்தலை விடுத்திருந்தது.

மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, இராஜாங்க அமைச்சர் நிஷாந்த சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் முன்வைத்த பிணை கோரிக்கையை சவால் செய்தார்.

பிணை வழங்குவது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாக அமையும் எனவும் சட்டத்தின் மேலாதிக்கத்திற்கு களங்கம் ஏற்படும் என தெரிவித்துள்ளார். இதன்படி, பிரதிவாதியை இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இவ்விடயம் தொடர்பாக இரண்டு சட்டத்தரணிகளினால் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்களும் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளன.

ஓகஸ்ட் 23ஆம் திகதி பத்தரமுல்லையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ​​அரச அமைச்சர் நிஷாந்த, ஆர்ப்பாட்டக்காரர்களை கைதுசெய்து விடுவித்தமை தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டதுடன், உரிய நீதியை நடைமுறைப்படுத்துவதில் நேரடியாக தலையிடுவதற்கு சமம் என மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

சனத் நிஷாந்த எதிர்கால நீதிமன்ற உத்தரவுகளில் செல்வாக்கு செலுத்த முயற்சித்ததாகவும் பொதுவாக நீதித்துறையை அச்சுறுத்த முயற்சித்ததாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஊடகவியலாளரை கடத்த முயற்சி!

east tamil

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியிலிருந்து கழற்றி விடப்படும் கட்சிகள் எவை?: ஞாயிறு தீர்மானம்!

Pagetamil

கழுத்துக்குள் பாய்ந்த தடி அகற்றப்பட்டது: வவுனியா வைத்தியசாலையில் வெற்றிகரமான அறுவை சிகிச்சை!

Pagetamil

இலங்கையில் 2024 சுற்றுலா வருகைகள் 2 மில்லியனைத் தாண்டியது

east tamil

ஊடகவியலாளர்களுக்கு இனி அனுமதி இல்லை

east tamil

Leave a Comment