ரி20 உலகக்கிண்ணத்திற்கு முன்னதான, இன்றைய இலங்கையின் இரண்டாவது பயிற்சி ஆட்டம் மெல்போர்னில் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.
இந்த ஆட்டம் மெல்போர்னில் உள்ள ஜங்ஷன் ஓவல் மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது.
எனினும், மழை காரணமாக ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது.
மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதல் பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் சிம்பாவேயை வீழ்த்தியது.
இலங்கை 20 ஓவர்களில் 188/5 ரன்களை எடுத்தது, பின்னர் சிம்பாப்வேயை 155/5 என்று கட்டுப்படுத்தியது.
இலங்கை, ஒக்டோபர் 16 ஆம் திகதி உலகக் கோப்பை தொடக்க ஆட்டத்தில் நமீபியாவை எதிர்கொள்கிறது.
குரூப் ஏ போட்டி இலங்கை நேரப்படி காலை 9.30 மணிக்கு ஜீலோங்கில் நடைபெற உள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1