10, 5 வயதான இரண்டு சிறார்களுக்கு தடியைக்காட்டி மிரட்டி கசிப்பு அருந்துமாறு வற்புறுத்திய கசிப்பு கடத்தல்காரரை கைது செய்துள்ளதாக ஓயமடுவ பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் 25 வயதுடையவர்.
பொலிஸ் அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஓயாமடுவ பொலிஸ் உத்தியோகத்தர்கள் சந்தேகநபரை கைது செய்ததுடன் இரண்டு குழந்தைகளையும் தமது காவலில் எடுத்துக்கொண்டனர்.
குறித்த இடத்திற்குச் செல்லும் போது இரண்டு குழந்தைகளும் கசிப்பு குடித்ததால் அதிக போதையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கசிப்பு அருந்தியதால் சுகவீனமடைந்த பத்து வயது குழந்தை அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1