வடக்கு மாகாணசபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் உறுப்பினர் பசுபதிப்பிள்ளை இன்று காலமானார்.
கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற கிராம சேவையாளரான இவர், விடுதலைப் புலிகள் பரவலாக ஆட்களை திரட்டி பிரச்சாரத்தில் ஈடுபட்ட 2006 இன் பின்னான காலகட்டத்தில் சிறிது காலம் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்திருந்தார்.
மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். எனினும், தனது இறுதிக்காலத்தில் கிளிநொச்சி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமையின் செயற்பாடுகளில் அதிருப்தியடைந்திருந்தார்.
இவர் மறைவுக்கு முன்னர், உருத்திரபுரீஸ்வரர் ஆலயத்தின் நிர்வாக உறுப்பினராக இருந்ததுடன், சமய பணிகளையும் முன்னெடுத்தார்.
உருத்திரபுரீஸ்வரர் ஆலய வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராட்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், பெளத்த ஆதீக்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டங்களையும் முன்னெடுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.