26.7 C
Jaffna
December 21, 2024
Pagetamil
இலங்கை

பூநகரி மீனவர்களின் வாழ்வாதாரம் பறிப்பு: 3வது நாளாக தொடரும் போராட்டம்!

உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பூநகரி கடற்தொழிலாளர்கள் தமது போராட்ட வடிவத்தை மாற்றியமைத்து இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை(2) மூன்றாவது நாளாகவும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

பூநகரி – கிராஞ்சி இலவன் குடா கடல் பகுதியில் பாரம்பரியமாக சிறகு வலை தொழிலில் ஈடுபட்டுவரும் கடற்தொழிலாளர்கள் கடந்த வெள்ளிக்கிழமை மாலை முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

கிராஞ்சி இலவன்குடா கடற்பகுதியில் கடலட்டை பண்ணை அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இலவன் குடா கடற்பரப்பில், பெண் தலைமைத்துவ குடும்பங்கள் உட்பட கடற்தொழிலாளர்கள், சிறகு வலை தொழிலின் ஊடாக இறால், நண்டு, மீன் போன்றவற்றை பிடிப்பதை அன்றாட வாழ்வாதார தொழிலாக பல ஆண்டுகளாக செய்து வருகின்றனர்.

இந்நிலையில் அவர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் தற்போது கடலட்டை பண்ணைகள் அமைக்கும் முயற்சிகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.

இதனை தொடர்ந்து கடற்தொழிலாளர்கள் குறித்த உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பில் சாதகமான முடிவை சம்மந்தப்பட்டவர்கள் வழங்கும் வரை தாம் போராட்டத்தை கைவிடப் போவதில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் மீனவர்கள் உள்ளடங்களாக மக்கள் முகம் கொடுத்து வரும் பல்வேறு பிரச்சனைகளுக்கு கை கொடுத்து மனிதாபிமான பணியில் ஈடுபட்டு வருகின்ற மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பிரதிநிதிகள் நேற்று சனிக்கிழமை (1) மதியம் குறித்த உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களை நேரடியாக சந்தித்து கலந்துரையாடினர்.

இதன் போது குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோஇமற்றும் பணியாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது குறித்த மீனவர்களின் பிரச்சினைகளை குறித்த குழுவினர் கேட்டறிந்தனர்.

இந்த நிலையில் தமக்காக ஒரு அமைப்பு ஆதரவு வழங்கி வருகின்ற நிலையில் தமது உரிமைகளை வென்றெடுக்க உணவு தவிர்ப்பு போராட்டத்தை கைவிட்டு,தமது போராட்ட வடிவை மாற்றி சுழற்சி முறையில் போராட்டத்தை மேற்கொள்ள தீர்மானித்து உணவு தவிர்ப்பு போராட்டத்தை கைவிட்டனர்.

இந்த நிலையில் 3வது நாளாக இன்று ஞாயிற்றுக்கிழமை (2) தமது போராட்டத்தை குறித்த மீனவர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கணவர் மீது முறைப்பாடு… விசாரிக்க சென்ற பொலிசாருக்கு கடி: லைக்கா கட்சியில் தேர்தலில் போட்டியிட்ட பெண்ணுக்கு நேர்ந்த கதி!

Pagetamil

ஜேவிபி ஆட்சியை தக்க வைக்க யாழில் சங்கம் அமைத்த குழு!

Pagetamil

புத்தாண்டுக்கு முன் உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்படும்

Pagetamil

ஊர்காவற்துறை விபத்தில் இளைஞன் பலி

Pagetamil

வன்னி மாவட்ட முன்னாள் எம்.பியும் அவரது செயலாளரும் பிணையில் விடுதலை

Pagetamil

Leave a Comment