Pagetamil
உலகம்

சீன ஜனாதிபதி வீட்டுக்காவலிலா?

சீன ஜனாதிபதி பதவியில் இருந்தும், சீன மக்கள் விடுதலை ராணுவத்தின் (பிஎல்ஏ) தலைவர் பதவியில் இருந்தும் ஜி ஜின்பிங் நீக்கப்பட்டுள்ளார் என்று சமூக ஊடகங்களில் செய்திகள் உலா வருகின்றன. எனினும், இது உறுதிப்படுத்தப்பட்ட செய்தியாக செய்யவில்லை.

சமீபத்தில் உஸ்பெகிஸ்தானின் சாமர்கண்ட் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், ரஷ்ய ஜனாதிாதி புடின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத் தலைவர் பதவியில் இருந்து ஜனாதிபதி ஜி ஜின்பிங் நீக்கப்பட்டு விட்டார் என்ற தகவல் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவுகிறது. அதேபோல, சீன மக்கள் பலர் தங்கள் ட்விட்டரில் “அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்” என்ற தகவலைப் பகிர்ந்துள்ளனர்.

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியும் இந்த தகவலை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

பிஎல்ஏ அமைப்பின் முழுக் கட்டுப்பாட்டில் ராணுவம் உள்ளதாகவும், சீனாவின் ஜனாதிாதியாக லீ கியாமிங் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீன ராணுவத்தின் வாகனங்கள் கடந்த 22ஆம் திகதியே தலைநகர் பெய்ஜிங் நோக்கிச் செல்லத் தொடங்கின என்றும், ஹூவான்லாய் மாகாணத்திலிருந்து, ஹெபே மாகாணத்தின் ஜாங்கியாகோ நகர் வரை 80 கி.மீ. தொலைவுக்கு ராணுவ வாகனங்கள் அணிவகுத்து நிற்பதாகவும் கூறப் படுகிறது.

ஜெனிபர் ஜெங் என்பவர் தனது ட்விட்டர் பதிவில், “சீனா கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், ஜனாதிபதியுமான ஜி ஜின்பிங்கை சீன மக்கள் விடுதலை ராணுவத் தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டதால், அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

தகவல் பரவுவது ஏன்?

சீனாவில் 2 மூத்த அமைச்சர்களுக்கு மரண தண்டனையும், 4 அதிகாரிகளுக்கு ஆயுள் தண்டனையும் இந்த வாரம் விதிக்கப்பட்டது. இவர்கள் சீன ஜனாதிபதிக்கு எதிராக அரசியல் பிளவை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால், ஜி ஜின்பிங்குக்கு எதிராகச் செயல்படுபவர்கள், அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்ற தகவலை பரப்புவதாகக் கூறப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ட்ரம்ப்- புடின் தொலைபேசி உரையாடல்: 30 நாள் எரிசக்தி கட்டமைப்புக்கள் மீதான தாக்குதல் நிறுத்தத்திற்கு ரஷ்யா ஒப்புதல்!

Pagetamil

9 மாதங்களுக்குப் பிறகு பாதுகாப்பாக பூமி திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்!

Pagetamil

போர்நிறுத்தம் பற்றிய புடினின் கருத்துக்கு டிரம்பின் எதிர்வினை

Pagetamil

’30 நாள் போர் நிறுத்தத்திற்கு தயார்; ஆனால்…’: புடின்

Pagetamil

உலகையே உலுக்கிய பாகிஸ்தான் ரயில் பயணிகள் கடத்தல்: பிந்திய நிலவரம்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!