தனது கணவருக்கும் ரிக்ரொக் காதலிக்கும் இரண்டாவது திருமணம் செய்து வைத்துள்ளார் முதல் மனைவி. இப்பொழுது மூவரும் ஒன்றாக வசித்து வருகிறார்கள்.
ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம் டக்கிலி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த கல்யாண் என்பவர் ரிக்ரொக்கில் பிரபலமானவர். அப்போது, விசாகப்பட்டினத்தை சேர்ந்த நித்தியஸ்ரீ என்ற ரிக்ரொக் பயனருடன் காதல் ஏற்பட்டது. இருவரும் இணைந்து ரிக்ரொக் வீடியோக்களை வெளியிட்டனர்.
சில வருட காதலின் பின், அந்த பெண்ணை விட்டு ஒதுங்கிய கல்யாண், பணக்கார வீட்டுப் பெண்ணான விமலா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
எனினும், காதலனிற்காக நித்தியஸ்ரீ காத்திருந்தார். அவர் திருமணம் செய்த தகவலை அறிந்திருககவில்லை.
அண்மையில், காதலனின் இருப்பிடத்தை அறிந்து திருப்பதி வந்துள்ளார். காதலனிற்கு திருமணமாகிய தகவலையறிந்து கதறி அழுதுள்ளார்.
இதையடுத்து, அவருடன் பேசிய முதல் மனைவி விமலா, இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தார். எனினும், தானும் அவர்களுடன் இருக்க வேண்டுமென சத்தியம் வாங்கிக் கொண்டார்.
பின்னர், கணவனிற்கும், ரிக்ரொக் காதலிக்கும் திருமணம் செய்து வைத்தார்.