பேராதனை பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் மாதத்திற்கு 13 மணிநேர பகுதி நேர வேலை வாய்ப்பை வழங்க பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
இலங்கையில் பல்கலைக்கழகமொன்றில் முதன்முறையாக நடைமுறைப்படுத்தப்படும் இந்த வேலைத்திட்டத்தின் கீழ், ஒரு மாணவர் ஒரு மணித்தியால வேலைக்காக ரூபா 350.00 வழங்கப்படும்.
இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பல்கலைக்கழக பழைய மாணவர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.டி.லமவன்ச தெரிவித்தார்.
பல்கலைக்கழகத்தில் கல்வி சாரா சேவைகளை வழங்குவதற்காகவும், இணையம் மூலம் அறிவுப் பரிமாற்றத்திற்காகவும் மாணவர்களுக்கு இந்த பகுதி நேர வேலை நியமனங்கள் வழங்கப்பட உள்ளன.
நாட்டில் ஏற்பட்டுள்ள சமூக, பொருளாதார நெருக்கடி மற்றும் புதிய வேலைத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும், அதேவேளையில் ஓரளவு வருமானம் கிடைக்கும் எனவும், மறுபுறம் மாணவர்களின் வாழ்க்கைச் சுமை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு குறைக்கப்படும் என்றார்.