26.8 C
Jaffna
December 21, 2024
Pagetamil
இலங்கை

டயானாவிற்கு கடிதம் அனுப்பிய செல்வம் எம்.பி

மன்னாரை களியாட்டங்களுக்காக பயன்படுத்த முடியும் எதற்காக கருவாடு உலர்த்த வேண்டும் என்று கூறப்பட்ட விடயம் தொடர்பாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே அவர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மன்னார் மாவட்டம் பாரம்பரிய கலை மற்றும் கலாச்சார பின்னணியினை கொண்ட மாவட்டமாகும். அபிவிருத்தி என்ற போர்வையில் வெளிநாட்டு செலாவணியை உள்வாங்குவதற்காக தவறான வழியை தேர்ந்தெடுப்பது சரியல்ல என்று நான் நினைக்கின்றேன்.

இம் மாவட்ட மக்கள் மீன்பிடி மற்றும் விவசாயம் ஆகிய இந்த இரண்டில் இருந்தும் தங்கள் வாழ்க்கைக்காக சம்பாதிக்கின்றனர். இந்த மக்களின் முக்கிய வருமான ஆதாரங்கள் இவை. எனவே இந்த தொழில்களை குறைத்து மதிப்பிட முடியாது.மீன் மற்றும் உலர் மீன்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் கூடுதல் அந்நியச் செலாவணியையும் ஈட்ட முடியும். உலர் மீன் தயாரிப்பது குறைத்து மதிப்பிட வேண்டிய தொழில் அல்ல. எனவே நீங்கள் கூறியது ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் பொருந்தாததுமாகும் என மேலும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஊர்காவற்துறை விபத்தில் இளைஞன் பலி

Pagetamil

வன்னி மாவட்ட முன்னாள் எம்.பியும் அவரது செயலாளரும் பிணையில் விடுதலை

Pagetamil

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு முன்னாள் பணிப்பாளரின் விளக்கமறியல் நீடிப்பு!

Pagetamil

கிளிநொச்சியில் ஒருவருக்கு மலேரியா

Pagetamil

யாழ்ப்பாணத்தை சிங்கப்பூராக்க வர்த்தகர்களாலேயே முடியும்

Pagetamil

Leave a Comment