கடந்த இரண்டு நாட்களில் அஜர்பைஜானுடனான மோதலில் 105 ஆர்மீனிய ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக ஆர்மீனிய பிரதமர் நிகோல் பஷினியன் தெரிவித்துள்ளார்.
ஆர்மீனியாவும் அஜர்பைஜானும் தெற்கு காகசஸில் சமீபத்திய மோதல்களுக்கு ஒருவரையொருவர் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆர்மீனியாவின் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில், சமீபத்திய இராணுவ மோதலின் விளைவாக அஜர்பைஜான் ஆர்மீனிய பிரதேசத்தின் சில பகுதிகளின் மீது “கட்டுப்பாட்டை நிறுவியுள்ளது” என்று பாஷினியன் கூறினார்.
“அஜர்பைஜான் ஆர்மீனியாவிற்கு எதிராக ஆக்கிரமிப்பு நடத்தியதாக நாங்கள் கூறினால், அவர்கள் சில பிரதேசங்களில் கட்டுப்பாட்டை நிறுவ முடிந்தது என்று அர்த்தம்,” என்று அவர் கூறினார்.
ஆர்மீனியாவில் செவ்வாயன்று 49 இறப்புகள் பதிவாகியுள்ளன, மேலும் இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அஜர்பைஜானின் 50 இராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர்.
சர்ச்சைக்குரிய நாகோர்னோ-கராபாக் பிராந்தியத்தில் இரண்டு வருடங்களின் முன்னர் அஜர்பைஜானுடன் நடந்த ஆறு வார காலப் போரின் போது செய்தது போல் – ஆர்மீனியாவில் இராணுவச் சட்டத்தை அறிமுகப்படுத்த எதிர்க்கட்சிகளின் அழைப்புகளை பாஷினியன் எதிர்த்தார் – அது இன்னும் தேவையில்லை என்று அவர் கூறினார்.