நாளை கெய்ர்ன்ஸில் நடைபெறவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான தொடரின் இறுதிப் போட்டியுடன் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அவுஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச் அறிவித்துள்ளார்.
எனினும், ரி20 போட்டிகளில் ஆடுவார்.
“ஒரு புதிய தலைவருக்கு அடுத்த உலகக் கோப்பைக்குத் தயாராகி வெற்றி பெறுவதற்கான சிறந்த வாய்ப்பை வழங்க வேண்டிய நேரம் இது. இந்த நிலைக்கு எனது பயணத்திற்கு உதவிய மற்றும் ஆதரவளித்த அனைவருக்கும் நான் நன்றி கூறுகிறேன்.
ஃபின்ச் இந்த ஆண்டு முழுவதும் 50 ஓவர் கிரிக்கெட்டில் மோசமான ஃபோர்மை வெளிப்படுத்தி வருகிறார். அவரது கடைசி 12 இன்னிங்ஸில் ஐந்து முறை டக் அவுட் ஆகியுள்ளார். கடைசி ஏழு இன்னிங்ஸ்களில் அவர் 26 ரன்கள் எடுத்துள்ளார்.
2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை வரை ஆடுவதற்கு முன்னதாக திட்டமிட்டிருந்தார். எனினும், மோசமான ஃபோர்ம் காரணமாக திட்டத்தை மாற்றிள்ளார்.
அரோன் ஃபின்ச், ஒருநாள் போட்டிகளில் 17 சதங்களுடன் 5400 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். அவுஸ்திரேலிய அணி சார்பில் ரிக்கி பொண்டிங் (29), டேவிட் வோர்னர் (18) மற்றும் மார்க் வோ (18) ஆகியோருக்கு அடுத்ததாக, அஸ்திரேலியாவின் மூன்றாவது அதிக சதம் அடித்த வீரர் அவர்தான்.
A true champion of the white-ball game.
Aaron Finch will retire from one-day cricket after tomorrow’s third and final Dettol ODI vs New Zealand, with focus shifting to leading Australia at the #T20WorldCup pic.twitter.com/SG8uQuTVGc
— Cricket Australia (@CricketAus) September 9, 2022
2015 உலகக் கோப்பையை வென்ற அணியின் ஒரு பகுதியாக இருந்தார்.
அவர் 2013 இல் MCG இல் இலங்கைக்கு எதிராக அறிமுகமானார். அந்த ஆண்டின் பிற்பகுதியில் ஸ்கொட்லாந்திற்கு எதிராக தனது முதல் சதத்தை அடித்தார். அப்போது அவர் 148 ரன்களை விளாசினார்.