27.4 C
Jaffna
January 27, 2025
Pagetamil
இந்தியா

பட வாய்ப்பு தருவதாக கூறி 100 இளம்பெண்களை ஏமாற்றி ஆபாசப்பட சூட்டிங்: போலி கம்பனி சிக்கியது!

சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாக தெரிவித்து 100 க்கும் மேற்பட்ட பெண்களை ஆபாச படம் எடுத்த இருவரை கைது செய்த போலீசார். சேலத்தில் செயல்பட்டு வந்த டுபாக்கூர் படக்கம்பெனியை இழுத்து மூடியுள்ளனர்.

சேலம் அருகே உள்ள இரும்பாலை பகுதியைச் சேர்ந்தவர் சேகர் என்பவரது மகள் ஜனனி , சூரமங்கலம் உதவி கமிஷனர் நாகராஜனிடம் ஒரு புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் சினிமாவில் நடிப்பதற்காக வாய்ப்புகள் தேடி வந்தபோது நண்பர் ஒருவர் கூறியதன் பேரில், ஜனனி சேலம் ஏவிஆர் ரவுண்டானா பகுதியில் ஓம் சக்தி தனியார் கட்டிடத்தில் இயங்கி வந்த ‘குளோபல் கிரியேஷன்ஸ்’ படக் கம்பெனிக்கு சென்றுள்ளார்.

அங்கு இருந்த சேலம் மாவட்டம் இடைப்பாடி வீரப்பன்பாளையத்தை சேர்ந்த வேல்சத்ரியன் (38) தன்னை சினிமா இயக்குனர் எனவும், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் இந்திராநகரை சேர்ந்த ஜெயஜோதி (23) என்பவர் உதவியாளர் எனவும் அறிமுகப்படுத்தி கொண்டனர்.

அவர்கள் இருவரும், தாங்கள் தயாரிக்கும் புதிய படத்தில் வாய்ப்பு தருவதாகவும், அதற்கு பணம் தர வேண்டும் எனவும் ஜனனியிடம் கேட்டுள்ளனர்.

தன்னிடம் பணம் இல்லை எனக்கூறியதால் ஜனனிக்கு வேலை வாய்ப்பு தருவதாக கூறி அவர்கள் அலுவலகத்தில் வேலைக்கு வைத்துக் கொண்டதாக கூறப்படுகின்றது.

சில நாட்களுக்கு முன்பு ஜனனியை ஆபாச படத்தில் நடிக்க இயக்குநர் வேல்சத்ரியன் வற்புறுத்தியதால், ஜனனி உடனடியாக வேலையை விட்டு விட்டு வந்துவிட்டார்.

அப்போது அவர்கள் பறித்து வைத்துக் கொண்ட செல் போனை வாங்கவும், வேலை பார்த்ததற்கு சம்பளம் பெறவும் மீண்டும் அங்கு சென்றுள்ளார். அங்கு வைத்து ஜனனியை மிரட்டி விரட்டி உள்ளனர்.

உள்ளே சில இளம்பெண்களை வைத்து ஆபாசமாக படம் எடுப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தாதல் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனனி தனது
புகார் மனுவில் தெரிவித்து இருந்தார் .

இந்த புகாரின் பேரில் போலீசார், அதிரடியாக அந்த படக் கம்பெனிக்கு நேற்று சென்று விசாரித்தனர். அப்போது அங்கிருந்த வேல்சத்ரியன், ஜெயஜோதி ஆகியோரை மடக்கிப் பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள், சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக பல இளம்பெண்களை ஏமாற்றி, அவர்களை வைத்து ஆபாசமாக படம் எடுத்து சீரழித்தது தெரியவந்தது.

அந்த அலுவலகத்தில் போலீசார் நடத்திய சோதனையில், சினிமாவில் நடிக்க வந்த இளம்பெண்களின் ஆபாச காட்சிகள் அடங்கிய ஹார்டு டிஸ்குகள்,
ஆணுறை பாக்கெட்டுகள், லேப்டாப்,கேமராக்கள், பென் டிரைவ் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

போலீசாரால் கைப்பற்றப்பட்ட ஹார்டு டிஸ்குகளில் 100க்கும் மேற்பட்ட இளம்பெண்களின் ஆபாச காட்சிகள் அடங்கிய வீடியோக்கள் உள்ளது. இதனை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து வேல்சத்ரியனிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.

இடைப்பாடியை சேர்ந்த வேல்சத்ரியன், கடந்த சில மாதங்களுக்கு முன் ‘நோ’ என்ற பெயரில் புதிய திரைப்படம் எடுப்பதாக அறிவித்து, அதில் நடிக்க நடிகைகள் தேர்வை நடத்தியுள்ளார். எப்படியாவது சினிமாவில் நடித்து விட வேண்டும் என்று வந்த இளம்பெண்களிடம், ஆசை வார்த்தை கூறி மயக்கியிருக்கிறார்.

மேலும், அந்த இளம்பெண்களின் பெற்றோரிடமும் தான் எடுக்கும் படம் தேசிய விருதுக்கான படம். அதனால், நான் சொல்வது போல் எல்லாம் நடிக்க வேண்டும் எனக்கூறி நம்பவைத்து, அப்பெண்களை தனது ஆசை வலையில் வீழ்த்தி கலைப்படம் என்று களவாணித்தனம் செய்து ஆபாச படம் எடுத்துள்ளார்.

முதலில் அந்த பெண்களை கிளாமராக நிற்க வைத்து படம் எடுப்பதும், பிறகு அவர்களை நிர்வாணப்படுத்தி வீடியோக்களையும் எடுத்துள்ளார்.

சேலம், கோவை, திருப்பூர், கள்ளக்குறிச்சி, சென்னை என பல்வேறு இடங்களில் இருந்து வந்து இளம்பெண்கள் ஏமாந்துள்ளனர் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

இதையடுத்து வேல்சத்ரியன், உதவியாளர் ஜெயஜோதி ஆகியோர் மீது கொலைமிரட்டல் விடுத்தல், ஆபாச படம் எடுத்த கணினி குற்றம் உள்ளிட்ட 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். பின்னர் இருவரையும் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சேலம் சிறைகளில் அடைத்தனர்.

வாடகைக்கு வீட்டை எடுத்து சினிமா கம்பெனி நடத்தி வந்துள்ளார் வேல் சத்ரியன். அங்குள்ள ஒரு அறையில் கேமரா, லைட்டிங் வசதி ஏற்படுத்த பட்டுள்ளது. அங்கு தான், இளம்பெண்களை ஆபாசமாக நிற்க வைத்து போட்டோ, வீடியோக்களை எடுத்துள்ளார். மற்றொரு அறையில் கட்டில், மெத்தை போன்றவையும் இருக்கிறது.

இவரைப்பற்றி மேலும் விசாரிக்க சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோடா உத்தரவிட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கடித்துக் குதறிய கணவன்; மனைவிக்கு உதட்டில் 16 தையல்கள்

east tamil

நல்லி குப்புசாமி, அஜித், ஷோபனாவுக்கு பத்ம பூஷண்; அஸ்வின், வேலு ஆசானுக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிப்பு

Pagetamil

வேங்கைவயல் சம்பவம் தனிப்பட்ட விரோதம்: தவறான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம் – தமிழக அரசு வேண்டுகோள்

Pagetamil

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய பெயரில் பலகோடி மோசடி

east tamil

மஹா கும்பமேளாவில் மீண்டும் தீ

east tamil

Leave a Comment