உத்தரபிரதேச மாநிலம் சீதாபூரில் ஒருவரின் திருமண நிகழ்வில் அவரது பிள்ளைகள் மற்றும் மனைவிகள் நுழைந்து குழப்பியடித்த காட்சிகள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே 4 மனைவிகளைக் கொண்ட 55 வயதான ஷாபி அகமது 5வது முறையாக திருமணம் செய்து கொள்ளவிருந்த போதே, இந்த ‘அனர்த்தம்’ நடந்தது.
இஸ்லாம் பலதார மணத்தை அனுமதிக்கிறது. குறிப்பிட்ட சூழ்நிலைகளில், எந்த நேரத்திலும் அதிகபட்சம் நான்கு மனைவிகளை திருமணம் செய்ய அனுமதிக்கிறது.
இருப்பினும், செவ்வாய்கிழமை இரவு அஹ்மதின் ஐந்தாவது திருமணம் அவரது ஏழு குழந்தைகள் மற்றும் அவரது மற்றைய மனைவிகளால் தடைபட்டது.
Uttarpradesh: Rest of the wives was sent on #Haj Pilgrimage, Father of 7 children from 2nd wife, was going to do 5th Nikaah (marriage): In Sitapur, the 2nd wife along with the children ßeat up the husband, the new bride absconded.
बाकी पत्नियों को हज यात्रा पर
+@Uppolice pic.twitter.com/oI0xQRrw1J— Ashwini Shrivastava (@AshwiniSahaya) September 1, 2022
அவர்கள் திருமண இடத்திற்குள் நுழைந்து ரகளையில் ஈடுபட்டனர். அவரது மனைவிகளும், பிள்ளைகளும் தாங்கள் யார் என்பதை மணப்பெண்ணின் குடும்பத்தினரிடம் தெரிவித்தபோது, வாக்குவாதம் ஏற்பட்டு, அது விரைவில் சண்டையாக மாறியது.
தந்தை மாதாந்திர செலவுக்கு பணம் கொடுப்பதை நிறுத்திவிட்டதாகவும், அவரது ஐந்தாவது திருமணம் குறித்து அறிந்ததும், நடவடிக்கை எடுக்க முடிவு செய்ததாகவும் பிள்ளைகள் தெரிவித்தனர்.
இதற்கிடையில், அந்த இடத்தில் கூடியிருந்த ஏராளமான மக்கள் மாப்பிள்ளையை சரமாரியாக தாக்கியதால், மணமகள் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டார்.
#Sitapur, UP: Shafi Ahmed (45), a father of 7 children, secretly tried 2 do 5th marriage.
During ths tme his 2nd wife rched thr wid her 7 children nd relatives. She, along wid d children, beat up her husband.
Shafi had abandoned his 2nd wife and 7 children.#UttarPradesh #UP pic.twitter.com/R2wJwvW9TE
— KafirOphobia (@socialgreek1) August 31, 2022
இதுகுறித்து கோட்வாலி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தேஜ் பிரகாஷ் சிங் கூறியதாவது: இந்த சம்பவம் குறித்து மணமகனின் குழந்தைகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பிறகு, சம்பவ இடத்திற்கு வந்து குற்றவாளிகளை கைது செய்தோம்.