அத்துமீறி நடந்த ஆணை, பொது இடத்தில் வைத்து பெண்ணொருவர் செருப்பால் அடித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் உள்ள தானா மஜோலா பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நடு வீதியில் வைத்து ஆணொருவரை, பெண் செருப்பால் அடிப்பதைக் காணலாம்.
மற்றவர்கள் தடுக்க முயன்றாலும், அந்தப்பெண், தொடர்ந்து அடிக்கிறார். காரணம் கேட்டபோது, அந்த நபர் தன்னை நோக்கி அநாகரீகமான கருத்துக்களை தெரிவித்ததாக அந்த பெண் கூறினார்.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இரு தரப்பினரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1