26.2 C
Jaffna
December 27, 2024
Pagetamil
இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய 14,988 முறைப்பாடுகள் கிடைத்ததாம்!

மோதல்கள் காரணமாக காணாமல் போனவர்கள் தொடர்பான 14,988 முறைப்பாடுகள் காணாமல் போனோர் அலுவலகத்திற்கு (OMP) கிடைத்துள்ளதாக நீதித்துறை, சிறை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

கடந்த புதன்கிழமை சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நினைவு தினத்தை முன்னிட்டு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்காகவும், அவர்களுக்கு நீதி வழங்குவதற்காகவும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு நீதி வழங்குவதற்காகவும், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காகவும் இந்த அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இந்த அலுவலகம் 2016 ஆம் ஆண்டு 16 ஆம் இலக்க காணாமல் போனோர் அலுவலக சட்டத்தின் மூலம் நிறுவப்பட்டு நான்கு வருடங்கள் கடந்துள்ள போதிலும் விசாரணைகள் மந்தகதியில் இடம்பெற்று வருகின்றன.

அலுவலகத்திற்கு புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டு நான்கு மாதங்களில் விசாரணை நிறைவடைந்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார். காணாமல் போனோர் தொடர்பான அனைத்து முறைப்பாடுகள் தொடர்பிலான விசாரணைகளை எதிர்வரும் இரண்டு வருடங்களில் நிறைவுசெய்வதே தமது நோக்கமாகும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தேசிய ஒற்றுமையை உருவாக்குவதற்கான நேர்மையான முயற்சிகளை வெற்றியடையச் செய்து இனம், மதம் மற்றும் மொழி ரீதியிலான முரண்பாடுகளைத் தடுத்து கிராமிய அமைதியைப் பாதுகாக்க அரசியலமைப்பு சட்டக் கட்டமைப்பு தயாரிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

காணாமற்போனோர் அலுவலகத்தினால் வழங்கப்படும் சான்றிதழானது நட்டஈட்டைப் பெறுவதற்கு அவசியமானது எனவும் அவர் மேலும் தெரிவித்தார். யுத்த காலத்தில் மோதல்கள் என்ற போர்வையில் தனிப்பட்ட பழிவாங்கல்கள் மேற்கொள்ளப்பட்டது, காணாமல் போனதாகக் கூறி சிலர் வெளிநாடுகளுக்குச் சென்றது, இவை அனைத்திற்கும் தீர்வாக அரசியலமைப்பு விசாரணைகளை மேற்கொள்வதற்காகவே காணாமல் போனோர் அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விமானத்திற்குள் உயிரிழந்த இலங்கை பெண்

east tamil

ஜனாதிபதி வெளியிட்டுள்ள அதி விசேட வர்த்தமானி

east tamil

கிளிநொச்சி மாவட்டம் அபிவிருத்தியில் பின்னடைவு – சிவஞானம் சிறீதரன்

east tamil

பதுளைக்கு விஷேட ரயில் சேவை

east tamil

அஸ்வெசும நலன்களுக்கு நிலுவைத் தொகை இன்று முதல் வங்கி கணக்குகளில்!

east tamil

Leave a Comment