Pagetamil
இலங்கை

மரணதண்டனையை நிறைவேற்ற ஜனாதிபதி கையொப்பமிட மாட்டார்!

மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு தான் கையொப்பமிடப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (31) சட்டமா அதிபர் ஊடாக உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

2019ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் நால்வரின் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை இரத்து செய்யுமாறு தாக்கல் செய்யப்பட்ட பல அடிப்படை உரிமை மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

விஜித் மல்லல்கொட, எல்.டி.பி. தெஹிதெனிய மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இது தொடர்பில் நேற்று (30) சட்டமா அதிபர் வினவியபோது, ​​மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு தான் கையொப்பமிடப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்தார்.

இதன்படி, இது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் போது, ​​இது தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே, மரண தண்டனையை அமுல்படுத்துவதில்லை என அரசாங்கம் கொள்கை ரீதியில் தீர்மானம் எடுத்துள்ளதாக நீதிமன்றில் தெரிவித்தார்.

அந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்

சிஐடியில் மைத்திரி

Pagetamil

உள்ளூராட்சி வேட்புமனு நிராகரிப்பு: மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சங்கு அணி மனு!

Pagetamil

சாமர சம்பத் நீதிமன்றத்தில்

Pagetamil

சிஜடியிலிருந்து வெளியேறிய நாமல்

Pagetamil

மனைவி, தம்பி சிறை சென்றதால் அரசியலை கைவிடப் போவதில்லை!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!