ஹபராதுவ, உனவடுவ, மெதரம்பவில் உள்ள வழிபாட்டிடத்தை நடத்தி வந்த கீர்த்தி படகொட என்பவரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் மேலும் 6 மாணவர்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சிறார்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி, அதனை வீடியோ படம் பிடித்து, வெளிநாட்டவர்களுக்கு விற்று வந்துள்ளது விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
கொழும்பு, அத்துருகிரிய பகுதிகளில் அதி சொகுசு வீடுகளை கீர்த்தி படகொட வாங்கியுள்ளார். அவருக்கு சொந்தமான பேருந்து ஒன்று, படுக்கையறை, குளியலறை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. அந்த பேருந்துக்குள்ளும் சிறார்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் காலி, திஸ்ஸமஹாராம, மாத்தறை மற்றும் டிக்வெல்ல ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள்.
சந்தேகநபரால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் 16 ஆண் மாணவர்களை CID இதுவரை அடையாளம் கண்டுள்ளது. அவர்கள் 9 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.