அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பல பில்லியன் டொலர் மதிப்புள்ள மாணவர் கடன்களை இரத்து செய்யவிருப்பதாக அறிவித்துள்ளார்.
அவர் ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின்போது அந்த உறுதிமொழியை வழங்கியிருந்தார்.
பல்கலைக்கழகக் கல்விக்காக மாணவர்கள் 20,000 டொலர் வரை நிவாரண நிதி் பெற அந்தத் திட்டம் வகை செய்யும்.
COVID-19 தொற்று பரவலில் இருந்து மீண்டுவருவதற்கு, மிக அதிகமான கல்விக் கட்டணங்களும், அவற்றின் தொடர்பிலான கடன்களும் முட்டுக்கட்டையாக இருப்பதாக பைடன் கூறினார்.
பொதுப் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கான கட்டணம், கடந்த பல ஆண்டுகளில் மும்மடங்காகிவிட்டது.
கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதி அமெரிக்க மாணவர்கள், பல்கலைக்கழகக் கல்விக்குக் கடன் பெறுகின்றனர்.
தற்போது சுமார் 45 மில்லியன் மாணவர்களுக்குக் கடன் இருப்பதாகவும், அவர்கள் மொத்தம் 1.6 டிரில்லியன் டொலர் கடனைத் திரும்பத் தரவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஜனாதிபதி பைடனின் புதிய திட்டத்துக்கு 300 பில்லியன் டொலருக்கு மேல் செலவாகும் என்று கூறப்படுகிறது.