காலி, அஹுங்கல்ல, கட்டுவில பகுதியில் நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் சிறிய காயங்களுடன் தப்பித்துள்ளார்.
பாதாள உலக மன்னன் கொஸ்கொட சுஜீயின் கூட்டாளியான, வட்டித் தொழிலில் ஈடுபடும் ஒருவர் மீதே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
அவர் மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், கொஸ்கொடவைச் சேர்ந்த அன்டன் என அழைக்கப்படும் சுஜித் பிரசங்க துப்பாக்கிச் சூடு காரணமாக காலில் மாத்திரம் காயம் அடைந்து பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்பும் அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்போதும் தப்பித்துக் கொண்டுள்ளார்.
காயமடைந்தநபர் சட்டவிரோத பணக்கடன் வழங்கும் தொழிலை நடத்தி வருவதாகவும், வேறு சில சட்டவிரோத வியாபாரங்களையும் அவர் நடத்தி வருவதாக சந்தேகிக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். அஹுங்கல்ல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.