இரண்டு கையடக்கத் தொலைபேசிகள், இரண்டு மின்கலங்கள் மற்றும் இரண்டு சார்ஜர்கள் ஆகியவற்றை வெலிக்கடை விளக்கமறியலில் வைக்க முற்பட்ட கைதி ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
வெலிக்கடை சிறைச்சாலை பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகள் கைதிகளை சோதனையிட்ட போது கால்சட்டைப் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த சார்ஜர்கள் மற்றும் பட்டரிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர் வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 48 வயதுடையவராவார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1