இத்தாலியில் ஒருவர் கொரோனா தொற்று, குரங்கம்மை, எச்.ஐ.வி ஆகியவற்றின் தாக்கத்திற்கு ஒரே நேரத்தில் ஆளாகியுள்ளார்.
அது குறித்து Journal of Infection சஞ்சிகையில் தகவல் வெளியிடப்பட்டது.
ஜூன் மாதம் 16 ஆம் திகதிக்கும் 20 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் 36 வயதான அந்த நபர் ஸ்பெயினுக்குச் சென்றிருந்தார்.
9 நாள்களுக்குப் பிறகு அவரிடம் தொண்டை வலி, சோர்வு, தலைவலி உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டன.
அவருக்குக் கடந்த மாதம் 2 ஆம் திகதி கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
அதே நாளில் அவரின் உடலில் தடிப்புகளும் ஏற்படத் தொடங்கின.
அறிகுறிகள் மோசமடைந்ததை அடுத்து, அவர் 5 ஆம் திகதி மருத்துவப் பராமரிப்பை நாடியதாகக் குறிப்பிடப்பட்டது.
மறுநாள் அவரது மாதிரிகள் சோதிக்கப்பட்டதில், அவருக்குக் குரங்கம்மை இருப்பதும் HIV-1 இருப்பதும் தெரியவந்தது.
அவருக்குக் COVID-19, குரங்கம்மை அறிகுறிகள் தென்படவில்லை. சிகிச்சையின் பின் 11ஆம் திகதி வீடு திரும்பினார்.
அவர் ஏற்கெனவே syphilis நோயால் பாதிக்கப்பட்டதுண்டு என்றும் அவருக்கு Bipolar disorder எனும் மனநலப் பிரச்சினை இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ள அவர் இவ்வாண்டுத் தொடக்கத்தில் ஏற்கெனவே ஒரு முறை COVID-19 தொற்றால் பாதிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டது.
இந்நிலையில், குரங்கம்மைக்கும் COVID-19க்கும் ஒரே நேரத்தில் ஆளாகலாம் என்பதை அmவரின் அனுபவம் காட்டியுள்ளதாக ஆய்வாளர்கள் கூறினர்.