தொடங்கொட மலபட பிரதேசத்தில் வாகனமும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தொடங்கொட பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கரவண்டி யத்தோலை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து எரிபொருளை எடுத்துக்கொண்டு மத்துகமவில் இருந்து களுத்துறை நோக்கி சென்று கொண்டிருந்ததாகவும், வாகனம் களுத்துறையில் இருந்து மத்துகம நோக்கி சென்று கொண்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கரவண்டியின் பின்னால் பயணித்த இருவர் விபத்தில் உயிரிழந்துள்ளதுடன், அவர்கள் தொடங்கொட சபுகஹவத்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முச்சக்கர வண்டி சாரதியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1