Pagetamil
இந்தியா

இந்தியாவில் போலி கடவுச்சீட்டு பெற்ற இலங்கை பெண் மத போதகர் கைது!

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இந்திய கடவுச்சீட்டைப் பெற்ற குற்றச்சாட்டில் 43 வயதுடைய இலங்கைப் பெண் ஒருவரை குற்றப் பிரிவு பொலிஸார் ஓகஸ்ட் 16ஆம் திகதி கைது செய்தனர்.

கைதானவர் பெண் மத போதகராவார்.

கொழும்பைச் சேர்ந்த மனுவல் மரியா செல்வம் என்ற பெண், அண்ணா நகரில் வசித்து வந்தவர், ஒரு தேவாலயத்தில் பாதிரியாராக பணிபுரிந்தார். இவர் கடந்த 2016ம் ஆண்டு போலி ஆவணங்கள் மூலம் இந்திய பாஸ்போர்ட்டை பெற்றுள்ளார்.

அவரது இலங்கை கடவுச்சீட்டு 2020 இல் காலாவதியானது என பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது அடையாளத்தையும் தேசத்தையும் மறைத்து இந்திய கடவுச்சீட்டைப் பெற்றுள்ளதாக  குடிவரவு அலுவலகத்திற்குத் தெரிவித்ததை அடுத்து இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.

நுங்கம்பாக்கத்தில் உள்ள குடியுரிமை அலுவலகத்தில் விசாரணைக்காக அவர் அழைக்கப்பட்டார், அங்கு அதிகாரிகள் அவரது ஆவணங்களை ஆய்வு செய்ததில், ஆதார ஆவணங்கள் போலியானது என்பதைக் கண்டறிந்தனர்.

குடியுரிமை அதிகாரி நிபின் ஜோசஃப் அளித்த புகாரின் அடிப்படையில் மோசடி, பொய்யான ஆவணங்களை புனைதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக பெண் மத போதகர் மானுவேல் மரியா செல்வம் என்பவர் பாதிரியார்களின் மகன்களை குறிவைத்து வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இலட்சக் கணக்கில் பண மோசடியில் ஈடுபட்டதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்ட நிலையில் விசாரணை நடத்தி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

 

 

இதையும் படியுங்கள்

பிக்பாஸ் தர்ஷன் கைது!

Pagetamil

‘நான் உயிருடனும் ஆரோக்கியமாகவும் இருக்கிறேன்’ – சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நித்யானந்தா

Pagetamil

கச்சத்தீவை மீட்க உடனடி நடவடிக்கை தேவை: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

Pagetamil

மனைவியை கொன்று சூட்கேசில் மறைத்த வைத்த கணவர் கைது

Pagetamil

பாலியல் வன்கொடுமை வழக்கில் அலகாபாத் ஐகோர்ட் வழங்கியது தவறான தீர்ப்பு: மத்திய அமைச்சர் அதிருப்தி

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!