இந்த வருடம் மார்ச் மாதம் நடைபெற்ற 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நாடு முழுவதும் 2,438 பரீட்சை மையங்களில் மொத்தம் 345,242 பேர் பரீட்சைக்கு தோற்றினர்.
இம்மாதம் 15 ஆம் திகதி பெறுபேறுகளை வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் முன்னதாக தெரிவித்தார்.
விரைவில் முடிவு வெளியிடப்படுமா என்ற கேள்விக்கு, தற்போது தேர்வு முடிவுகளை வெளியிடும் பணி நடைபெற்று வருவதாகவும், இன்னும் சில நாட்கள் ஆகும் என்றும் ஆணையாளர் தெரிவித்தார்.
“அநேகமாக இந்த மாதத்தின் கடைசி வாரத்தில் முடிவு வெளியிடப்படும்,” என்று அவர் கூறினார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1