26.6 C
Jaffna
March 17, 2025
Pagetamil
சினிமா

நடிகை மேக்னா ராஜ் 2வது திருமணமா?

2வது திருமணம் செய்து கொள்வதைப் பற்றி நடிகை மேன்னா ராஜ் பேசியுள்ளார்.

தமிழில் காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா நந்திதா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள மேக்னா ராஜ் மலையாளம், கன்னட மொழியிலும் அதிக படங்களில் நடித்து இருக்கிறார்.

மேக்னா ராஜின் கணவரும், கன்னட நடிகருமான சிரஞ்சீவி சர்ஜா 2020ஆம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

மேக்னா ராஜுக்கு 32 வயதாகும் நிலையில் அவரிடம் 2வது திருமணம் செய்து கொள்ளும்படி குடும்பத்தினர் வற்புறுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் 2வது திருமணம் செய்து கொள்வீர்களா என்ற கேள்விக்கு மேக்னா ராஜ் பதில் அளித்து கூறும்போது,

”எனது கணவர் மறைவுக்கு பிறகு குழந்தையின் எதிர்காலம் பற்றியே சிந்திக்கிறேன். என்னிடம் 2வது திருமணம் செய்து கொள்ளும்படி சிலர் வற்புறுத்துகிறார்கள். இன்னும் சிலர் திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்கிறார்கள். இப்போது 2-வது திருமணம் செய்து கொள்வது பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை. வரும் காலங்களில் என்ன நடக்கும் என்று தெரியவில்லை. எனது மனம் என்ன சொல்கிறதோ அதன்படி நடப்பேன்.

2வது திருமண விஷயத்தில் நான் என்ன முடிவு எடுத்தாலும், சிரஞ்சீவி சர்ஜா என்னுடன் இருப்பார் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

“குடும்பத்துடன் விரதம் இருக்கும் நயன்தாரா” – ‘மூக்குத்தி அம்மன் 2’ படவிழாவில் தயாரிப்பாளர் தகவல்

Pagetamil

காதல் முறிவு: விஜய் வர்மாவை பிரிந்தார் தமன்னா!

Pagetamil

பிரபல பாடகி கல்பனா தற்கொலை முயற்சி: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

Pagetamil

ஒஸ்கர் 2025: விருதுகளைக் குவித்த ட்யூன் 2, அனோரா, தி ப்ரூட்டலிஸ்ட்

Pagetamil

விஜய் சாதனையை முறியடித்த அஜித்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!