டுபாய் பொலிஸாரின் பிடியில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரன் நதுன் சிந்தக என்ற ஹரக் கட்டாவை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான பேச்சுவார்த்தைகள் வெளிவிவகார அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் பொலிஸாருக்கு இடையில் தற்போது இடம்பெற்று வருவதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த வாரம் அவரை இந்த நாட்டுக்கு அழைத்து வர தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.
கடந்த வெள்ளிக்கிழமை, சிந்தக கைது செய்யப்பட்டதாக டுபாயில் இருந்து இலங்கைக்கு உத்தியோகபூர்வ அறிவித்தல் சர்வதேச பொலிஸாரின் ஊடாக வழங்கப்பட்டது.
அதன்படி அவரை இலங்கைக்கு அழைத்து வருவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவினரால் விசேட ஒருங்கிணைப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸ் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
அதன்படி, ஹரக் கட்டா என்றழைக்கப்படும் சிந்தகாவை நாடு திரும்ப அழைத்து வருவதற்கான சட்ட நடைமுறைகளை முடித்துக்கொண்டு விசேட குழுவொன்று டுபாய்க்கு வார இறுதிக்குள் செல்லவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.