மன்னார், நெடுகுடா கடற்கரையில் போதைப் பொருள்கள் மீட்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
வடமத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான கஜபா கப்பலினால் மன்னார், நெடுகுடா கடற்கரை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட ரோந்து நடவடிக்கையின் போது, மன்னார் நெடுகுடா கடற்கரையில் பொலித்தீன் பைகளில் பொதி செய்யப்பட்ட போதைப்பொருட்கள் மீட்கப்பட்டன
கடத்தல்காரர்கள் கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் போதைப்பொருளை இலங்கைக்கு கொண்டு வர முயற்சித்ததாகவும், கடற்படை நடவடிக்கை காரணமாக அதனை தரையிறக்க முடியாமல் போனதாகவும் நம்பப்படுகிறது.
கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்களின் மொத்த சந்தைப் பெறுமதி 4.5 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும் என நம்பப்படுவதுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் வரை குறித்த போதைப்பொருள் கடற்படையினரின் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1