கடந்த செவ்வாய்க்கிழமை (16) காலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த சீன உளவுக் கப்பல் யுவான் வாங் 5 இன்று (22) நாட்டிலிருந்து புறப்படவுள்ளது.
யுவான் வாங் 5 கப்பலின் வருகை அண்மைய நாட்களில் இலங்கை மற்றும் பிராந்திய அரசியலில் பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. யுவான் வாங் 5 ஆராய்ச்சிக் கப்பல் என சீனா குறிப்பிட்டாலும், அது இரட்டைப் பயன்பாட்டு உளவுக்கப்பல் என இந்தியா குறிப்பிட்டது.
இந்தியாவின் எதிர்ப்பின் காரணமாக, கப்பலின் திட்டமிட்ட வருகையில் தாமதம் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தமது அப்பிராயத்தை மீறி கப்பலின் வருகைக்கு இலங்கை அனுமதித்ததால், இந்தியா கடுமையான அதிருப்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1