28.7 C
Jaffna
December 21, 2024
Pagetamil
இலங்கை

இந்தியாவிற்கு கடலால் சென்றவர்கள் மணல்தீடையில் கைக்குழந்தையுடன் 3 நாட்கள் தத்தளித்த கிளிநொச்சி நபர்கள்!

கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையிலுள்ள கடற்பரப்பின் மூன்றாம் மணல் தீடையில் இரண்டரை மாத கை குழந்தையுடன் 8 நபர்கள் இறக்கி விடப்பட்ட நிலையில்,இன்று ஞாயிற்றுக் கிழமை (21)காலை குறித்து 8 பேரையும் இந்திய கடலோர காவல் படையினர் மீட்டுள்ளனர்.

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் இந்தியா, ஆஸ்திரேலியாவுக்கு சட்ட விரோதமான முறையில் கடல் வழி பாதை ஊடாக பயணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இலங்கை இருந்து கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மூன்றாம் மணல் தீடையில் இரண்டரை மாத கை குழந்தையுடன் மூன்று லிட்டர் தண்ணீருடன் 8 நபர்கள் படகோட்டிகளினால் இறக்கி விடப்பட்டிருந்தனர்.

மேலும் பசியும் பட்டினியுமாக கை குழந்தையுடன் தண்ணீர் மட்டும் குடித்து மூன்று நாட்களாக மணல் தீடையில் தஞ்சம் அடைந்தவர்களை இந்திய கடலோர காவல்படை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை (21) மீட்டு மரைன் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மேலும் ஏற்கனவே இலங்கையில் இருந்து வாழ வழியின்றி 134 நபர்கள் தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதில் ஒரே ஒரு மூதாட்டி உயிரிழந்து உள்ளார்.

இந்த நிலையில் இரண்டு குடும்பங்களை சேர்ந்த இரண்டரை மாத கைக்குழந்தையுடன் 8 நபர்கள் மூன்றாம் மணல் தீடையில் தஞ்சம் அடைந்தவர்களை இந்திய கடலோர காவல்படை மீட்டு மரைன் போலீசாரிடம் ஒப்படைத்த நிலையில் மரைன் போலீசார் அவர்களை விசாரணை நடத்தி மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட உள்ளனர்.

இவர்கள் கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிய வருகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

முட்டையின் விலையில் வீழ்ச்சி

east tamil

கணவர் மீது முறைப்பாடு… விசாரிக்க சென்ற பொலிசாருக்கு கடி: லைக்கா கட்சியில் தேர்தலில் போட்டியிட்ட பெண்ணுக்கு நேர்ந்த கதி!

Pagetamil

ஜேவிபி ஆட்சியை தக்க வைக்க யாழில் சங்கம் அமைத்த குழு!

Pagetamil

புத்தாண்டுக்கு முன் உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்படும்

Pagetamil

ஊர்காவற்துறை விபத்தில் இளைஞன் பலி

Pagetamil

Leave a Comment