இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே மற்றும் பாதுகாப்பு அமைச்சின் பரிந்துரையின் பேரில் இராணுவத்தின் சிரேஷ்ட பிரிகேடியர்கள் ஒன்பது பேர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மேஜர் ஜெனரல்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
அதன்படி, பொறியியல் பிரிவின் பிரிகேடியர் ஷெவந்த் குலதுங்க,
23 பிரிவின் கட்டளைத் தளபதி, இலங்கை இலகு காலாட்படை பிரிகேடியர் மிஹிது பெரேரா, சிறப்புப் படையின் பிரிகேடியர் விபுல இஹலகே, 58 வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் இந்திரஜித் விதானச்சி, இலங்கை பீரங்கிப் படையின் பிரிகேடியர் மஞ்சுள காரியவசம், பணிப்பாளர், விசேட படைப் பிரிவின் பிரிகேடியர் சந்திமால் பீரிஸ், 57ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் நிஷ்ஷ்யங்க எரியகம, 21வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் மகிந்த ரணசிங்க, பிரிகேடியர் மகிந்த ரணசிங்க மற்றும் வஜிர வெலகெதர ஆகியோர் இவ்வாறு மேஜர் ஜெனரல் தரத்திற்கு உயர்த்தப்பட்டனர்.