டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட 14 பேர் கொண்ட தமது குழு நாட்டுக்காக சில முக்கிய தீர்மானங்களை எடுக்க தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கூறுகிறார்.
நேற்று (20) அனுராதபுரம் ஸ்ரீ மஹா போதியை தரிசித்த பின் ஊடகங்களிடம் இதனை தெரிவித்தார்.
ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் போட்டியிட்ட டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவளித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இந்த பயணத்தில் பங்கேற்றிருந்தது.
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கொழும்பில் இருந்து அனுராதபுரத்திற்கு பேருந்தில் வந்துள்ளனர்.
அனுராதபுரத்தை வந்தடைந்த எம்.பி.க்கள் குழுவினர் முதலில் ஸ்ரீ மஹா போதியை வழிபட்டு ஆசி பெற்றனர்.
இந்த குழு, இன்றும் அனுராதபுரத்தில் தங்கியிருப்பார்கள் என அறிய முடிகிறது.
அநுராதபுரத்தில் உள்ள மகா சங்கத்தினரை தரிசித்து ஆசிர்வாதம் பெற்று உள்ளூர் அரசியல் ஆர்வலர்கள் மற்றும் வர்த்தகர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், பேராசிரியர் சரித ஹேரத், பேராசிரியர் சன்ன ஜயசுமண, கலாநிதி நாலக கொடஹேவ, டிலான் பெரேரா, உதயண கிரிடிகொட, வசந்த யாப்பா பண்டார உள்ளிட்ட சுமார் 14 பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தப் பயணத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.