வல்லை வெளியில் முதியவர் ஒருவரின் சடலம் இன்று நண்பகல் மீட்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் வல்லை இராணுவ முகாமிற்கு அண்மையாக சடலம் மீட்கப்பட்டது.
கடந்த 17ஆம் திகதி காணாமல் போன மயில்வாகனம் குருமூர்த்தி (75) என்பவரே சடலமாக மீட்கப்பட்டார்.
வெளிநாட்டிலிருந்து அவரும், குடும்பத்தினரும் அண்மையில் இலங்கை வந்து, தொண்டைமானாறு வல்லை வீதியிலுள்ள வீட்டில் தங்கியிருந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 17 ஆம் திகதி குருமூர்த்தி காணாமல் போயிருந்தார்.
பிறரின் உதவி தேவைப்படுபவரான குருமூர்த்தி தொடர்பில் எந்த தகவலும் இல்லாமலிருந்த நிலையில், இன்று சடலமாக மீட்கப்பட்டார். அவரது முகப்பகுதி விலங்குகளால் சேதப்படுத்தப்பட்டிருந்தது.
அவர் அணிந்திருந்த ஆடைகளை வைத்து உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர் என்று பொலிஸார் கூறினர்.
பிரேத பரிசோதனைக்காக சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.